37. கழறிற்றறிவார் நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 37
இறைவன்: அஞ்சைக்களத்தப்பர்
இறைவி : ?
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : ?
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : கொடுங்காளூர்
முக்தி தலம் : திருஅஞ்சைக்களம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - சுவாதி
வரலாறு : சேரநாட்டை ஆண்ட மன்னர். சேரமான் பெருமாள் என்ற பெர்யரும் இவருக்கு உண்டு. இறையருளால் பிற உயிர்கள் பேசுவதை அறியும் சக்தி இவருக்கு உண்டு. எனவே கழறிற்றறிவார் என்று அழைக்கலாயினர். சிறந்த சிவபக்தர். ஒரு நாள் யானை மீது சென்று கொண்டிருந்தபோது எதிரே வண்ணான் ஒருவன் தன் உடம்பெல்லாம் உவர் மண் அப்பிய நிலையில் வந்து கொண்டிருந்தான். அது அரசனுக்கு திருநீற்றை நினைவுபடுத்தவே யானையின் இருந்து கீழிறங்கி அவனை வணங்கினார். சிவபெருமானிடமிருந்து கடிதம் கொண்டு வந்த பாணபத்திரர் என்ற புலவருக்குப் பொன்னும் மணியும் கடிதத்தில் கண்டவாறு கொடுத்தனுப்பினார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய தோழர். சுந்தரர் கயிலைக்கு யானையின் மீது சென்றபோது இவரும் அவருக்கு முன்பாக குதிரையின் மேல் அமர்ந்து கயிலை சென்றார்.
முகவரி : அருள்மிகு. மகாதேவ சுவாமி கோயில், திருஅஞ்சைக்களம் (வழி-கொடுங்காளூர்) திருச்சூர் மாவட்டம் – 680664 கேரளா
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 05.00 – 11.00 ; மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : நிர்வாக அதிகாரி
தொலைபேசி : 0480-2812061, 0480-2803061

இருப்பிட வரைபடம்


மண்மேற் சைவ நெறிவாழ
வளர்ந்து முன்னை வழியன்பால்
கண்மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணுங் கருத்தினராய்
உண்மே வியஅன் பினராகி
யுரிமை யரசர் தொழில்புரியார்
தெண்ணீர் முடியார் திருவஞ்சைக்
களத்தில் திருத்தொண் டேபுரிவார்.

- பெ.பு. 3759
பாடல் கேளுங்கள்
 மண்மேற் சைவ


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க